பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விளம்பர விழிப்புணர்வு ஊர்தியை மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் விழிப்புணர்வு விளம்பர ஊர்தி சென்னையில் தொடங்கி, மாவட்ட வாரியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இந்த ஊர்தி பெரம்பலூர் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது, வாகனத்தை குத்து விளக்கேற்றி தொடக்கிவைத்து மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி பேசியது:
இந்த விழிப்புணர்வு விளம்பர ஊர்தியில் வளர் இளம் பெண்களுக்கான ஆலோசனைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கருத்துப் பரிமாற்றங்கள், தாய்பால் பற்றிய விழிப்புணர்வு, 6 மாதம் முதல் 3 வயது குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான இணை உணவு வழங்குதல், 3 வயது முதல் 5 வயது குழந்தைகளுக்கான முன்பருவக் கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்துகள் விடியோ திரையின் மூலமாக பொதுமக்களுக்கு விளக்கப்படுகிறது என்றார்.
விளம்பர ஊர்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புறநகர் பேருந்து நிலையம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தி. புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


