ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரியில் கருத்தரங்கு

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் அறிவியல் விழிப்புணர்வு  கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:59 am

DIN

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் அறிவியல் விழிப்புணர்வு  கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
டிச. 29 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கின் கொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் க. மனோகரன் தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனைவர். எஸ். மணலி சோமசுந்தரம் கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினார். 
தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சுற்றுச்சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த முனைவர் எஸ். உமா மகேஸ்வரி, மனித வாழ்வுக்கு விஞ்ஞானிகளின் பங்கு எனும் தலைப்பில் சங்ககால இந்தியாவில் வாழ்ந்த விஞ்ஞானிகள், நவீன அறிவியலில் அவர்களின் பங்களிப்பு குறித்தும், பெரம்பலூர் மாவட்டம், கீழக்கனவாய் கிராமத்தில் உள்ள வாகை இயற்கை வேளாண் பண்ணை நிறுவனர் விக்ரம் கண்ணன், இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் எனும் தலைப்பில், வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் தாக்கம், இயற்கை உரம் மற்றும் இயற்கை முறை விவசாயத்தின் நன்மைகள், அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விளக்க உரையாற்றினர். இக்கருத்தரங்கில், 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் முனைவர் இரா.மாலதி வரவேற்றார். உயிர் தொழில்நுட்பவியல் துறை விரிவுரையாளர் முனைவர் எஸ். சந்திரசேகர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.