ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பு

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 2016-17 ஆம் ஆண்டுக்கான கூடுதல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்கும்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:01 am

DIN

பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 2016-17 ஆம் ஆண்டுக்கான கூடுதல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதனகோபாலபுரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 711 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான தொடக்க விழாவில், முதல்கட்டமாக 15 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையை பால்வளத் துறை துணைப் பதிவாளர் நா. கண்ணன் வழங்கினார். தொடர்ந்து, பெரம்பலூர் ஆவின் மேலாளர் வி.பி. அன்பழகன், பால் உற்பத்தியாளர்களின் செயல்பாடு, தாது உப்பு பயன்பாட்டின் நன்மை குறித்து விளக்கிப் பேசினார். 
சங்கத் தலைவர் ரா. செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சார் பதிவாளர் ரெ. நாராயணசாமி, முதுநிலை ஆய்வாளர்கள் த. செந்தில், விஜயா, விரிவாக்க அலுவலர் அம்பேத்கர், சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சங்கப் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 
செயலர் பி. பாண்டியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.