ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

160 நபர்களுக்கு தையல் இயந்திரங்கள் அளிப்பு

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 160 நபர்களுக்கு ரூ. 10.40 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:56 am

DIN

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 160 நபர்களுக்கு ரூ. 10.40 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்),  ஆர்.டி. ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் திங்கள்கிழமை வழங்கினர்.
  மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் வேப்பந்தட்டை,  வேப்பூர்,  பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீர்வடிப் பகுதியின் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ. 140 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த தொகையில் 696 நபர்களுக்கு ரூ. 45.24 லட்சத்தில் மதிப்பீட்டில் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.  மேலும், ஆடு வளர்க்க 422 பயனாளிகளுக்கு ரூ. 50.64 லட்சம், புறக்கடை கோழி வளர்ப்புக்கு 418 நபர்களுக்கு ரூ. 22.99 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள்  வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை, தொண்டமாந்துறை, உடும்பியம், தழுதாழை, வெங்கனூர், பெரியம்மாபாளையம், பெரியவடகரை, கை.களத்தூர்,  காரியனூர் மற்றும் அய்யனார்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 160 நபர்களுக்கு ரூ. 10.40 லட்சம் மதிப்புள்ள தையல் இயந்திரங்களையும், 3 நபர்களுக்கு தீவனப்புல் நொறுக்கும் இயந்திரமும் வழங்கினர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. தமிழ்ச்செல்வன், ஆர்.டி. ராமச்சந்திரன்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட அலுவலர் ஆர். சுதர்சன், துணை இயக்குநர் சி. அண்ணாதுரை, உதவி இயக்குநர் கு. பழனிச்சாமி மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.