சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

காவிரி விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் மறியல்: 30 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில்  

Updated On :5 ஏப்ரல் 2018, 9:24 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேரைப் பெரம்பலூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.  
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பெரம்பலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டன. 
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ப. அருள் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.