காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
இதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் தேரடிப் பகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, பிரதமர் மோடி உருவப்பொம்மையை எரித்தனர். முன்னதாக அக்கட்சி நிர்வாகிகள், வியாழக்கிழமை ( ஏப். 5) நடைபெறுகிற முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரக்கோரி அனைத்து வணிகக் கடை உரிமையாளர்களடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வழக்குரைஞர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தைச் இளைஞர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பா... மகனே...

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


