ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:33 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, ஏரி, குளங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். கடன் தள்ளுபடியை நிறுத்தி, விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 40, பருத்திக்கு ரூ. 60, கரும்பு டன்னுக்கு ரூ. 6,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இந்த மறியல் நடைபெற்றது. 
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையில் மறியல் செய்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் மூ. மணியன், வேப்பூர் ஒன்றிய செயலர் மதியழகன் உள்ளிட்ட 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.