ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

"தேசிய விவசாயம், கிராமப்புற வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ. 27 கோடியில் பணிகள்'

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ. 27 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:32 am IST

தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் ரூ. 27 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் கல்லாற்றின் குறுக்கே வி. களத்தூரில் கட்டப்படும் அணைக்கட்டு பணிகள், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாடு மற்றும் மேம்பாலப் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. 
அனைத்துப் பணிகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, பணி முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும், குறித்த காலத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மூலம் வி.களத்தூரில் கல்லாற்றின் குறுக்கே ரூ. 8 கோடியில் அணைக்கட்டு, பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) மூலம் ரூ. 4.26 கோடியில் பள்ளிக் கட்டங்கள், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ. 3.84 கோடியில் சாலை மற்றும் பாலப்பணிகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ. 3.52 கோடியில் சாலை மற்றும் பாலப்பணிகள், வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 4.50 கோடியில் வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட 31 பணிகள் ஊரக கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 27 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், நபார்டு வங்கியின் கடனுதவியாக ரூ. 24.3 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சாந்தா.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர், நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் பிராபாகரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண் பொறியல் துறை உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.