இளம்பெண் மாயம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளம்பெண் கடத்தப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளம்பெண் கடத்தப்பட்டாரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னம் அருகேயுள்ள க.எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகள் ரஞ்சிதா (22). பி.ஏ. படித்துள்ளார். திருமணமாகாத இவர், கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வரை வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் ரஞ்சிதா கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தந்தை மணி மருவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




