பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இளைஞர் சாவில்  சந்தேகம்:தாயின் புகாரில் விசாரணை

பெரம்பலூர் அருகே இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:00 am

DIN

பெரம்பலூர் அருகே இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினக்குமார் (27), பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர். 
இவரது மனைவி அனிதா (23). தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் அனிதா சின்னாறு பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். 
இந்நிலையில், சின்னாறு சென்று மனைவியை பார்த்துவிட்டு சிறுவாச்சூர் வந்த ரத்தினக்குமார் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தார். 
இதையடுத்து, சின்னாறு சென்றபோது தனது மகனை அடித்து, அவமானப்படுத்தியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும், மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ரத்தினக்குமாரின் தாய் மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.