நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அயினாபுரம்  மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஜூலை 2018, 2:51 am

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயினாபுரம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடத்துவது என கிராம மக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. பின்னர், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்னம், சிம்மம், மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, மங்கள இசை முழங்க அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாடாலூர், அயினாபுரம், திருவிளக்குறிச்சி, ஆலத்தூர் கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைகிறது. விழா  ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.