விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெரம்பலூரில் விடுமுறை நாள்களிலும் வரி வசூல் மையம் செயல்படும்

பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையம் விடுமுறை நாள்களிலும்(மார்ச் 29 முதல் 31 வரை) செயல்படும் என தெரிவித்துள்ளார் நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 1:32 am

பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையம் விடுமுறை நாள்களிலும்(மார்ச் 29 முதல் 31 வரை) செயல்படும் என தெரிவித்துள்ளார் நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  பெரம்பலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, புதை சாக்கடை கட்டணம், வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். 
பொதுமக்களின் நலன்கருதி விடுமுறை நாள்களான வியாழக்கிழமை (மார்ச் 29) முதல் 31 ஆம் தேதி வரை பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். 
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தலாம். 
மேலும், கட்டணம் செலுத்தாவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.