லாடபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.


பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ தனவாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சார்பில் பூ போடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. முன்னதாக மாலை 3 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிருந்து பூஜை பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு தினைமலை வரதராஜப் பெருமாள் கோயிலில் விஷேச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான தனவாரியம்மன் கோயில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ஜூன் 6 ஆம் தேதி காலை நடைபெறுகிறது. ஜுன் 7 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...