பெரம்பலூர் நகரில் எலக்ட்ரிக்கல் கடையை உடைத்து ரூ. 1.25 லட்சம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், பனங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சவுந்திரராஜன் (35). இவர், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். வியாபாரத்தை முடித்து விட்டு வழக்கம்போல, சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டுச்சென்றாராம். இந்நிலையில், அந்தக் கடையின் அருகேயுள்ள டீ கடையை, அதன் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்க வந்தாராம். அப்போது. எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற சவுந்திரராஜன் உள்ளே சென்று பார்த்தபோது, தீபாவளி ஊக்கத்தொகையாக ஊழியர்களுக்கு வழங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1.25 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. சவுந்திரராஜன் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிந்த பெரம்பலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, துறையூர் சாலையில் உள்ள காய்கறி மற்றும் மருந்துக் கடையின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சி நடந்திருப்பதும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









