/

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஐடிஐக்களில் செப்.14-க்குள் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:15 am

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் பி. மஞ்சுளாதேவி, அரியலூர் அரசு தொழில்பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ்.கற்பகம் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 3 பணிமனை  உதவியாளர், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிமனை உதவியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ, என்.டி.சி, என்.ஏ.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்சார பணியாளர் தொழில் பிரிவுக்கு பொதுப்பிரிவு முன்னுரிமை பெற்றவர்களும், பொருத்துநர் தொழில்பிரிவுக்கு ஆதரவற்ற விதவை பெண்களுக்கு முன்னுரிமையும், இயந்திர வேலையாள் தொழில்பிரிவுக்கு பொதுப்பிரிவு முன்னுரிமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆலத்தூர் அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அல்லது 04328-267555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அரியலூர் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ-யில் மோட்டார் மெக்கானிக் முடித்திருக்க வேண்டும். 2018 ஜூலை 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் செப்.14ஆம் தேதிக்குள் முதல்வர், அரசு தொழில் பயிற்சி நிலையம், அரியலூர்  621 704 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நிலைய 04329-228408 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.