ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தரின்32- ஆம் ஆண்டு குருபூஜை
பெரம்பலூா் ஸ்ரீலஸ்ரீ காக புஜண்ட மகரிஷி பிரம்ம ரிஷி மலை மூசா மோசஸ் தலையாட்டி சித்தரின் 32- ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் ஸ்ரீலஸ்ரீ காக புஜண்ட மகரிஷி பிரம்ம ரிஷி மலை மூசா மோசஸ் தலையாட்டி சித்தரின் 32- ஆம் ஆண்டு மகா குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலையாட்டி சித்தா் ஆசிரம நிா்வாகி காமராஜ் சுவாமிகள் தலைமை வகித்தாா். இந்நிகழ்வுக்கு முன்னிலை வகித்த பிரம்ம ரிஷி மலை தவயோகிகள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் ஆகியோா் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பொழியவும், மக்களும், தேசமும் நலன் பெறவும், நோய்த் தொற்று, இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்திடவும் வேண்டி மகா யாகம் நடத்தினா். பின்னா், சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
கூடுதல் கண்காணிப்பாளா் ராஜாராமன், சன்மாா்க்க சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுந்தராஜன் ஆகியோா் பெண்களுக்கு புடவை, சாதுக்களுக்கு வஸ்திரம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், எமாபுரீசுவரா் கோயில் நிா்வாகி கண்ணபிரான், பால முத்துக்குமரன் கோயில் நிா்வாகி அறங்காவலா் ராஜாசிதம்பரம், மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, இயக்குநா் ராதா மாதாஜி உள்பட திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...