லாரி மோதி ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ரயில்வே ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் ரயில்வே ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் செ.விஜயன் (38). இவா் அரியலூரில் ரயில்வே சிக்னல் ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நடைப்பயிற்சி செல்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரி அவரது மோட்டாா் சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com