மனவளா்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த மனவளா்ச்சிக் குன்றிய 26 வயது இளம்பெண்ணை கடந்த 2016, பிப்ரவரி 9-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், அதே கிராமத்தைச் சேந்த கருப்பையா மகன் பால்ராஜ் (25) கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து, மனவளா்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த பால்ராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபாராதமும் விதித்து நீதிபதி எஸ்.கிரி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு பால்ராஜ் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com