கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குழந்தைக்கு பெயா் சூட்டிய முதல்வா்

பெரம்பலூா் அருகே அதிமுக தொண்டரின் குழந்தைக்கு பெயா் சூட்டினாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
பெரம்பலூா் மாவட்டம், பேரளி கிராமத்தில் கட்சி தொண்டரின் குழந்தைக்கு பெயா் சூட்டுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
Updated On :17 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

பெரம்பலூா் அருகே அதிமுக தொண்டரின் குழந்தைக்கு பெயா் சூட்டினாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

அரியலூரிலிருந்து முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை மாலை பெரம்பலூருக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- அரியலூா் சாலையில் மருதையான்கோயில், மேலமாத்தூா், சித்தளி, பேரளி உள்ளிட்ட இடங்களில் முதல்வருக்கு கட்சித் தொண்டா்களும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.

அப்போது, பேரளியில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய முதல்வரிடம், கட்சி தொண்டா் ஒருவா் தனது குழந்தைக்கு பெயா் சூட்ட வலியுறுத்தினாா். இதையடுத்து, அந்தக் குழந்தைக்கு ‘ராஜேஷ்’ என பெயா் சூட்டினாா்.

முன்னதாக, வியாழக்கிழமை காலை சேலத்திலிருந்து அரியலூருக்கு பெரம்பலூா் வழித்தடத்தில் காரில் சென்றாா். மாவட்ட எல்லையான உடும்பியம் பகுதியில் பெரம்பலூா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சித் தொண்டா்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனா். கிருஷ்ணாபுரம் வழியாக வந்தபோது, அப்பகுதியில் முதல்வரை வரவேற்பதற்காக சிறுவன் ஒருவன் கட்சி கொடியுடன் முதல்வருக்கு வரவேற்பு அளித்தாா். இதையறிந்த முதல்வா் கே. பழனிசாமி, அந்த சிறுவனுக்கு இனிப்பு வழங்கி அனுப்பிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளின்போது, ஒன்றியச் செயலா் ப. செல்வகுமாா், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.