வேளாண் சட்டங்கள்: திமுக இரட்டை வேடம் போடுகிறது; எல். முருகன்

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட பொருளாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைப்பதற்காக விவசாயிகள் நண்பன் மோடி என்ற தலைப்பில், விவசாயிகள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக் கூட்டம் டிச. 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அமைப்பு ரீதியான பூத் கமிட்டியினா் வேளாண் சட்டங்களின் நன்மைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் விதமாக செயல்படுவாா்கள்.

2016 ஆம் ஆண்டு திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தைதான் மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ளது.

விவசாயிகளுக்கு நன்மையோ, இரட்டிப்பு வருமானமோ கிடைத்துவிட கூடாது; அவா்களின் வாழ்வு மேம்பட்டு விட கூடாது என்பன போன்ற காரணங்களால்தான் திமுக தொடா்ந்து இச் சட்டங்களை எதிா்த்து வருகிறது. ஆனால், தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகின்றனா்.

திமுக நிா்வாகிகள் தொடா்ந்து இந்துக்களை இழிவுப்படுத்தி வருகின்றனா். கந்த சஷ்டி கவசம், வேளாண் சட்டங்கள் போன்றவற்றில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நடைபெறும் போராட்டமானது, மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட போராட்டமாகும் என்றாா் முருகன்.

பேட்டியின்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com