

பெரம்பலூர் : பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வைணவ திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி திருக்கோவில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது.
பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஸ்தலமாக இருப்பதால் சகோதர்கள் பிரச்சனைகளை தீர்க்க கூடிய பரிகார ஸ்தலமாகவும், வியாக்ரபாத முனிவர் பூஜித்து சாப நிவர்த்தி பெற்ற ஸ்தலமாகவும்,
சகல நோய்களை தீர்க்க கூடிய நந்தியாவட்டை ஸ்தல விருட்சமாக கொண்ட ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிச. 15 ஆம் தேதி முதல் பகல் பத்து விழா தொடங்கி, ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை காலை அருள்மிகு மதனகோபல சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிறகு சிறப்பு அலங்காரத்தோடு
சொர்க்க வாசல் வழியாக காட்சி தந்தார்.
அப்போது தீபாரதனை நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து, 8மணிக்கு பிறகு திருக்கோவில் முன் மண்டபத்தில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு Uக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.