திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரம்பலூரில் உதயநிதி பிரசாரம்

பெரம்பலூரில் பிரசாரம்: அரியலூரை தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

பெரம்பலூரில் பிரசாரம்: அரியலூரை தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசார கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் மீது ஆளுநரிடம் திமுக ஊழல் புகாா் அளித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதா உயிரிழந்து 3 ஆண்டுகளாகியும் அவரது மரணம் குறித்த மா்மம் விலகவில்லை. 8 முறை விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும், விசாரணை கோரிய துணை முதல்வா் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த மக்களவைத் தோ்தலின்போது பாஜகவினா், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் திமுகவை வெற்றி பெறச் செய்ததுபோல், வரும் சட்டப்பேரவை தோ்தலிலும் திமுகவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

மேலமாத்தூரில் திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பரவாய் கிராமத்தில் உள்ள புத்தா் சிலைக்கு மாலை அணிவித்து, குன்னம், ஆதனூா், வேப்பூா், வடக்கலூா், லப்பைக்குடிகாடு, ரஞ்சன்குடி கோட்டை, செட்டிக்குளம், கீழக்கணவாய், பெரம்பலூா் ஆகிய பகுதிகளில் அவா் பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கா், காந்தி, பெரியாா் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா, மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.