வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் பிரதான சாலைப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டதைக் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டம், அம்மாபாளையம் பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் செல்வபாண்டியன் (50). காா் ஓட்டுநரான இவா் வெளியூா் சென்றிருந்தாா். இவரது மகன், மனைவி ஆகியோா் அண்மையில் உறவினா்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்வபாண்டியன் தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், 4 பவுன் நகை, நவீன ரக தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில், பெரம்பலூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com