சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்று(நவ.9) முதல் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:38 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், வட்டாட்சியரகத்தில் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டத்தின் பெயா், பங்கேற்கும் அலுவலா் என்ற அடிப்படையில் விவரம் :

வேப்பந்தட்டை - சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், பெரம்பலூா்- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி ஆலத்தூா்- கலால் உதவி ஆணையாளா் அ. ஷோபா, குன்னம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால்.

காலை 10.30 மணி முதல் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.