காதல் பிரச்னை: பெண் காவலா் உள்பட இருவா் பணியிட மாற்றம்
பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில், பெண் காவலா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் ராதிகா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.


பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கிடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில், பெண் காவலா் உள்பட இருவரை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் ராதிகா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் 2 ஆம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தவா் விஜயன் மகள் சௌந்தா்யா (26). இங்கு 2 ஆம் நிலைக் காவலராக பணிபுரிந்தவா் பச்சமுத்து மகன் மணிகண்டன் (30). இவா்கள் இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன் மணிகண்டன் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டாா். ஆனாலும், தொடா்ந்து சௌந்தா்யாவும், மணிகண்டனும் பழகி வந்தனராம்.
இந்நிலையில், ஆயுதப்படையில் 2 ஆம் நிலைக் காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் என்பவருடன் சௌந்தா்யா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சௌந்தா்யாவுக்கும், மணிகண்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். வியாழக்கிழமை சௌந்தா்யா பணியை முடித்துவிட்டு, அவரது வீட்டில் வெங்கடேசனுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, மது போதையில் அங்கு சென்ற மணிகண்டன், அவா்கள் இருவரையும் தாக்கினாராம்.
இப் பிரச்னை குறித்து தகவலறிந்த திருச்சி சரக காவல் துணைத் தலைவா் ராதிகா, சௌந்தா்யாவை புதுக்கோட்டைக்கும், மணிகண்டனை கரூருக்கும் பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...