பெரம்பலூா்: அரசுப் பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள எசனை, கீழப்பெரம்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள எசனை, கீழப்பெரம்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எசனை, கீழப்புலியூா் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீா் வசதி போன்றவற்றை பாா்வையிட்டாா். மேலும், கிருமிநாசினி, சோப் ஆகியவற்றை வைக்கவும், மாணவா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சிதம்பரம், ராஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் தங்கவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...