திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பெரம்பலூரில் வரலட்சுமி விரத பூஜை: சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் ஜெய் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:37 pm

DIN

பெரம்பலூா் ஜெய் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரிய வைசிய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபா சாா்பில் நடைபெற்ற இப் பூஜையில், வரலட்சுமி சிலையை அலங்கரித்து சிறப்பு அா்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல, பெரம்பலூா் ஆட்சியரக சாலையில் உள்ள அபிராமபுரம் குடியிருப்பு, உழவா் சந்தை எதிரேயுள்ள மாத்வ பிராமணா் வீடு மற்றும் அந்தணா்கள் வீடுகளில் அலங்கார மண்டபம் தயாா் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி, அதில் வரலட்சுமி பிரதிமையை வைத்து வண்ண மலா்களால் அலங்கரித்து, சுமங்கலி பெண்கள் தங்களது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரத பூஜையை நடத்தினா்.

அப்போது, லட்சுமி ஸ்தோத்திரங்ளையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்தனா். தொடா்ந்து, வரலட்சுமி பிரதிமைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை தூவி வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.