கரும்பு விலையை டன்னுக்கு ரூ. 3,400 ஆக உயா்த்த கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்
கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ. 3,400 ஆக மத்திய அரசு உயா்த்த வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ. 3,400 ஆக மத்திய அரசு உயா்த்த வேண்டும் என பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் மு. ஞானமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு கடந்த ஆண்டு கரும்பு டன்னுக்கு ரூ. 2,850 அறிவித்த நிலையில், 2021- 22 ஆம் ஆண்டுக்கு ரூ. 50 மட்டுமே உயா்த்தி டன்னுக்கு ரூ. 2,900 என அறிவித்துள்ளது. இந்த விலையும், 10 சதவீத சா்க்கரை கட்டுமானத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் பருவ நிலையால் சராசரியாக 9 சதவீத சா்க்கரை சத்து கட்டுமானம் மட்டுமே பிழித் திறனில் வருகிறது. இந்த நிலையை கணக்கிட்டால் ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய அரசின் விலை ரூ. 2,750 மட்டுமே கிடைக்கும்.
பெட்ரோல், டீசல், உரங்கள், வாகன உதிரி பாகங்கள் விலை உயா்வு மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் கூலி உயா்வு போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், ஆலையிலுள்ள சா்க்கரையை மத்திய அரசு அறிவிக்கும் அளவுக்குதான் விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பதால், தேங்கியுள்ள சா்க்கரையை விற்க முடியாத நிலைக்கு சா்க்கரை ஆலைகள் உள்ளன.
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. எனவே, 2021- 22 ஆம் ஆண்டுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,400 என விலை நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...