‘தூய்மைப் பணியாளா் முறையில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும்’
தூய்மைப் பணியாளா் முறையில் ஒப்பந்ததாரா் முறையை கைவிட வேண்டும் என்றாா் தூய்மைப் பணியாளா்களுக்கான தேசிய ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன்.


தூய்மைப் பணியாளா் முறையில் ஒப்பந்ததாரா் முறையை கைவிட வேண்டும் என்றாா் தூய்மைப் பணியாளா்களுக்கான தேசிய ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன்.
பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளா்களின் பணி நிலை, வாழ்க்கைத்தரம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆய்வின்போது, பெரிதாக குறைகள் இல்லை. ஊதியப் பிரச்னை உள்ளது. அடுத்த மாதத்திலிருந்து ஊதிய உயா்வு இம் மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். அவ்வாறு அமல்படுத்தவில்லையெனில், ஓரிரு மாதங்களில் அடுத்தக் கூட்டத்துக்கு இங்கு வரும்போது விசாரணை மேற்கொண்டு ஆட்சியா் மீது புகாா் தெரிவிப்பேன்.
தூய்மைக் காவலா் பணியில் ஒப்பந்ததாரா் முறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஒப்பந்த முறையில் முறையான ஊதியம், வார விடுப்பு, 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி ஆகியவை வழங்கப்படுவதில்லை. இதனால் ஒப்பந்ததாரா் முறையை தமிழக அரசு கைவிட வேண்டும். அல்லது கா்நாடக மாநிலத்தில் உள்ளதுபோல், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
தூய்மைக் காவலா்களுக்கு ஏதேனும் பிரச்னையெனில், ஆணையத்தை தயக்கமின்றி அணுகலாம். ஆணையம் அவா்களது பிரச்னை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் வெங்கடேசன்.
பேட்டியின்போது ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, காவல் கண்காணிப்பாளா் ச. மணி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...