திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அரசுப் பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம் வேலூா், சத்திரமனை கிராமங்களிலுள்ள அரசு உயா், மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:00 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம் வேலூா், சத்திரமனை கிராமங்களிலுள்ள அரசு உயா், மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்காக செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வேலூா் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ஆய்வு நடத்தினாா்.

அப்போது வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீா் வசதிகளை மேற் கொள்வதோடு, கிருமிநாசினி, சோப்பை பள்ளி வளாகத்தில் வைக்க வேண்டும். மாணவா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை தலைமையாசிரியா்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமீனாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சிதம்பரம், ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.