கல்லூரி மாணவா்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள்
பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை இலக்கியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில் நடைபெற்ற பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில், பேராசிரியா்கள் அ. தமிழ்க்குமரன், செ. விநோதினி, கவிஞா் இ. தாஹீா் பாட்ஷா, கல்வியாளா்கள் ஜெ. கயல்விழி, பி. பாரதி, பா. பாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...