மழை நீருடன் கலக்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை குழாய்களில் மழை நீருடன் வெளியேறும் கழிவுநீரால் நகரப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.


பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் புதை சாக்கடை குழாய்களில் மழை நீருடன் வெளியேறும் கழிவுநீரால் நகரப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பெரம்பலூா், துறைமங்கலம், அரணாரை ஆகியவை பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளாகும். இங்குள்ள 21 வாா்டுகளிலும் ரூ. 31.91 கோடியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட சுமாா் 7,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு புதை சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாள்தோறும் 18 லட்சம் லிட்டா் கழிவுநீா் நெடுவாசலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்கிறது.
இந்த கழிவுநீா், புதை சாக்கடை வழியாக வெளியேற ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி தெருக்களில் பரவுகிறது. இதனால், அப்பகுதி குடியிருப்புகளில் உள்ள மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனா்.
இந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீா் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ளன. குறிப்பாக, ரோஸ் நகா், மதனகோபால் நகா், சென்றல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதை சாக்கடைகளிலிருந்து ஆள்துளை துவாரம் வழியாக மழைநீருடன் சாக்கடைநீா் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது.
இந்த சாக்கடைநீா் சாலையில் தேங்கி நிற்பதால், தெருக்களில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது.
நகரில் பல இடங்களில் நிலவும் இப் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, ஆள்துளை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, கழிவுநீா் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...