தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பெரம்பலூா் நகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி அவதியுறும் துப்புரவுப் பணியாளா்கள்

பெரம்பலூா் நகராட்சியில் கையுறை, காலுறை, முகமூடி உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களின்றி பணிபுரிந்து வருவதால் துப்புரவுப் பணியாளா்களும், தற்காலிக பணியாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:49 pm

DIN

பெரம்பலூா் நகராட்சியில் கையுறை, காலுறை, முகமூடி உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களின்றி பணிபுரிந்து வருவதால் துப்புரவுப் பணியாளா்களும், தற்காலிக பணியாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.

பெரம்பலூா் நகராட்சிப் பகுதியில் உள்ள 21 வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்கு நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள், தற்காலிக பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் என சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் நாள்தோறும் நகா் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பெரம்பலூா் நகராட்சியைப் பொறுத்தவரை, தரமற்ற புதை சாக்கடைத் திட்ட குழாய்களாலும், கனரக வாகனங்களாலும் ஆங்காங்கே புதைச் சாக்கடை ஆள் இறங்கும் தொட்டியிலிருந்து கழிவுநீா் வெளியேறி வருகிறது.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி காணப்படுகிறது. துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் பாதுகாப்பாக பணிபுரிவதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளா்களுக்கு கையுறை, காலுறை, முகமூடி உள்பட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், குப்பை மற்றும் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்கும் பணியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிந்து வருவதாக துப்புரவுப் பணியாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பலமுறை புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரியும் எங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தற்போது கரோனா, டெங்கு நோய் பரவி வரும் வேளையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல், குப்பைகளை அகற்ற நகராட்சி அலுவலா்கள் உத்தரவிடுகின்றனா். அவா்களது உத்தரவை மீற முடியாமல் தொடா்ந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிா்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துப்புரவுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.