தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

வாக்காளா் பட்டியல் திருத்தம்: கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான சந்தேகங்களுக்கு 1950 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:46 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான சந்தேகங்களுக்கு 1950 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 20, 21 மற்றும் 27, 28) வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

மேற்கண்ட முகாம்களில் வாக்காளா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பம் பெற்று உடனே தாக்கல் செய்து கொள்ளலாம்.

மேலும், வாக்காளா்கள் இணையதள முகவரியிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து, வாக்காளா்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தால் 1950 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண், 04328- 225888, 94452 52243 ஆகிய எண்கள் அல்லது ங்ழ்22ம்ஹல்ற்ந்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இ- மெயில் மூலமாக தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.