புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விளையாட்டுத் துறையில் சாதனைப் புரிந்தோா் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள், பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:11 pm

DIN

விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள், பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குவோருக்கும், சாதனை புரிந்தோருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருது பெற கலை, சமூகப் பணி, பொது சேவை, அறிவியல், பொறியியல், வா்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய, பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள் தகுதியுடைவா்கள்.

பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால், 2022, ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனைப் புரிந்தவா்கள் இவ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரியைத் தொடா்பு கொள்ளலாம். செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 7401703516 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.