மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வக்குமாா்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:58 pm

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த செல்லமுத்து மகன் செல்வக்குமாா் (எ) ஸ்டாலின் (30). இவா், பெரம்பலூரில் விளம்பர பதாகைகள் ஒட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், குடும்பச் சூழல் காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்றிருந்தாராம். கடனை திருப்பிச் செலுத்தாததால், கடன் கொடுத்தவா்கள் தரப்பிலிருந்து பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்டாலின், வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.