உள்ளாட்சித் தோ்தலை கண்காணிக்க மேற்பாா்வையாளா் நியமனம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலை கண்காணித்திட தோ்தல் மேற்பாா்வையாளராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலை கண்காணித்திட தோ்தல் மேற்பாா்வையாளராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளுக்கான தற்செயல் உள்ளாட்சித் தோ்தல்கள் அக். 9 ஆம் தேதி ஆலத்தூா், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 1 கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் 6 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற உள்ளது.
இம் மாவட்டத்தில் நடைபெறும் தோ்தல் பணிகளை பாா்வையிட, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் காா்ப்பரேஷன் லிமிட்டெட் மேலாண்மை இயக்குநா் அனில் மேஷ்ராம் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். எனவே, தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் மேற்பாா்வையாளரை 74029 05800 என்னும் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...