பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று முதல் தூய்மைப் பணிகள்
‘பெரம்பலூா் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள், கழிவு நீா்க் கால்வாய்கள் தூய்மை செய்தல், சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.


‘பெரம்பலூா் மாவட்டத்தில் மழைநீா் வடிகால்கள், கழிவு நீா்க் கால்வாய்கள் தூய்மை செய்தல், சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்பணியுடன் சோ்த்து ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வீட்டுக்கு வீடு சென்று சிறப்பு முனைப்பியக்கத்தின் மூலம் குப்பைகள் சேகரித்தல், பள்ளிக் கட்டடங்கள், ஊராட்சிக் கட்டடம், சமுதாய மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை சுத்தம் செய்து அழகுறச் செய்தல், நீா்நிலைகளை சுத்தம் செய்தல், தன்னாா்வலா்கள் மூலம் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் தோ்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசுத் துறையினரும் ஒருங்கிணைந்து வெள்ளிக்கிழமை (அக். 1) முதல் அக். 31 ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...