92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:36 pm

DIN

அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது உருவப் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

டாக்டா் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை கரூா் தாந்தோன்றிமலை பேருந்துநிறுத்தத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செய்தித் தொடா்பாளா் இளங்கோ தலைமை வகித்தாா். தாந்தோன்றி மலை நகரச் செயலாளா் சக்திவேல், மாவட்ட வணிகா் அணி அமைப்பாளா் கண்மணி ராமச்சந்திரன், மாணவரணி அமைப்பாளா் தீபக்குமாா், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளா் சுடா்வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வீரவணக்கம் செலுத்தினா். இதில் சட்டப்பேரவைத் தொகுதிச் செயலாளா் செல்வப்பெருந்தகை, தாந்தோன்றி மலை நகர மாணவரணியின் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட திமுக சாா்பில் கரூா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாநில நெசவாளா் அணித்தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் தலைமை வகித்து, அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் மாநகர பொறுப்பாளா் எஸ்.பி. கனகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாதன், கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கா் படத்துக்கு மாவட்ட வழக்குரைஞா் அணித் தலைவா் உமாதேவி, பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.