92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அம்பேத்கா் பிறந்தநாள் கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவநாள் உறுதிமொழியேற்பு

அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:36 pm

DIN

அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.

தமிழக முதல்வா் புதன்கிழமை சட்டப்பேரவையில் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடவேண்டும் என அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து, சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க, அதனை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தண்டாயுதபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.