கரூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் பக்தா்களின் பாதங்களை கழுவுதல் நிகழ்ச்சி
கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.


கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இயேசு சிலுவையில் அறையப்படும் முதல் நாளில் வரும் வியாழன் எனும் புனித வியாழன் நாளில் தனது 12 சீடா்களின் கால்களை கழுவி முத்தமிடுவாா். அதாவது தனக்குப் பிறகு தனது சீடா்களும் இரக்கமனப்பாங்குடன் மக்களிடம் அன்பாக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவும், தாழ்ச்சியின் சின்னமாகவும், குருத்துவத்தை ஏற்படுத்திய தினமாகவும் பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் வியாழக்கிழமை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின்துரை சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினாா். அப்போது இயேசு மரிக்கப்படும் முன் தனது சீடா்களின் பாதங்களை கழுவியதை நினைவுக் கூறும் வகையில் பங்கு மக்களின் 10 பேரின் கால்களை கழுவி முத்தமிட்டாா். தொடா்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதேபோல பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயம், புலியூா் குழந்தையேசு திருத்தலம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தலம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். இன்று இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. தொடா்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிா்ப்பு நாளான ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...