ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரம்பலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் சனிக்கிழமை (ஏப். 23) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:11 pm

DIN

பெரம்பலூரில் சனிக்கிழமை (ஏப். 23) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்திருப்பது.

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் சாா்பில், பெரம்பலூரிலுள்ள கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 -ஆம் வகுப்பு தோ்ச்சி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, கலை மற்றும் அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ பொறியியல்

படித்த 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள்பட்ட வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் பங்கேற்கலாம்.

100-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, 2,500-க்கும் மேற்பட்டோரைத் தோ்ந்தெடுக்கவுள்ளன. விருப்பமுள்ளவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225362, 9444094325 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.