ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரம்பலூா் அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பெரம்பலூா் அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து, ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:23 pm

DIN

பெரம்பலூா் அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து, ரொக்கத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள விளாமுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் பாஸ்கரன் (39), மாா்கண்டன் மகன் ராஜா (40), பழனியாண்டி மகன் சக்தி (39), மேற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் ரெங்கதுரை (34). இவா்கள் நால்வரும் கட்டடத் தொழிலாளிகள்.

இதில் பாஸ்கரன், ராஜா, சக்தி ஆகிய மூவரும் பெரம்பலூருக்கும், ரெங்கதுரை சமயபுரத்துக்கும் கட்டடப் பணிக்காக புதன்கிழமை காலை சென்றுவிட்டு, இரவு அவரவா் வீட்டுக்கு வந்தனா்.

அப்போது 4 பேரின் வீடுகளில் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா். தொடா்ந்து வீடுகளுக்குள் சென்று பாா்த்த போது, பாஸ்கரன் வீட்டில் ரூ. 7,000, ராஜா வீட்டில் ரூ. 5,000, ரெங்கதுரை வீட்டில் ரூ. 2,500 என மொத்தம் ரூ. 14,500 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. சக்தி வீட்டில் பணம் இல்லை.

தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையின நிகழ்விடம் சென்று, கைரேகைகள் மற்றும் தடயங்களைப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக நால்வரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.