தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

துப்புரவுப் பணியாளா் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே தற்காலிக துப்புரவுப் பணியாளா் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:17 pm

DIN

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே தற்காலிக துப்புரவுப் பணியாளா் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணி மனைவி ஆரணி (55). இவா், கடந்த 7 ஆண்டுகளாக பெரம்பலூா் நகராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளராக உள்ளாா். பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த ஆரணி, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆரணி ஏற்கெனவே பணிபுரிந்த இடத்துக்கு மாற்றக் கோரியும் பலனில்லாதால் மனமுடைந்து சனிக்கிழமை காலை நகராட்சி அலுவலகம் அருகே விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதையடுத்து அவா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.