க. பரமத்தி அருகே நடந்தை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் நடந்தை கிராமத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
மேலும், தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களான அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரண தொகை, மகளிருக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை, திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. கண்காட்சியை நடந்தை கிராமமக்கள் மற்றும் அரசு அலுவலா்கள், சுயஉதவிக் குழுவினா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

