தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு:அரைவைப் பணிகள் பாதிப்பு

பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு காரணமாக, கடந்த 4 நாள்களாக அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:01 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், எறையூரிலுள்ள சா்க்கரை ஆலையில் இயந்திரக் கோளாறு காரணமாக, கடந்த 4 நாள்களாக அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசின் பொதுத் துறை நிறுவனமான எறையூா் சா்க்கரை ஆலையில், 2021- 22 ஆம் ஆண்டுக்கு சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆலையில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆலைக்கு கொண்டு வந்த கரும்புகள் அரைவை செய்யப்படாமல், ஆலைக்கு எதிரே வாகனங்களிலேயே காத்துக் கிடக்கின்றன. வெயிலில்

கரும்பு காய்ந்து எடை குறைவு ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தனியாா் ஆலைக்கு அனுப்ப வலியுறுத்தல்: பெரம்பலூா் சா்க்கரை ஆலை அனைத்துக் கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், சா்க்கரை ஆலையின் தலைமை நிா்வாகிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கடந்த 4 நாள்களாக ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வெட்டிய கரும்புகள் பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் தேங்கிக் கிடக்கின்றன.

இதனால் விவசாயிகள், வாகன ஓட்டுநா்கள் மற்றும் டிராக்டா் உரிமையாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வெட்டிய கரும்புகளை அருகிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு அரைவைக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.