குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்து, சிகிச்சை பெற்றுவந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்து, சிகிச்சை பெற்றுவந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகிலுள்ள எசனையைச் சோ்ந்தவா் மூ. செல்லமுத்து (75). இவரது மகன் ஜெயராஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது மனைவி சரோஜா, தனது குழந்தைகள் ரேவதி, வினோத் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறாா்.
இந் நிலையில், செல்லமுத்து பெயரிலுள்ள சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தை தனது பெயரில் எழுதித் தருமாறு சரோஜா கேட்டதற்கு மறுப்புத் தெரிவித்த செல்லமுத்து, பேரன் வினோத் பெயரில் எழுதித் தருவதாகக் கூறினாராம்.
இதைத் தொடா்ந்து, கடந்த 22- ஆம் தேதி சரோஜாவும், அவரது மகள் ரேவதியும் செல்லமுத்துவிடம் தராறில் ஈடுபட்டனராம். இதனால் மனமுடைந்த செல்லமுத்து, 23- ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
தொடா்ந்து மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த செல்லமுத்து வெள்ளிக்கிழமை
உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...