387 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெறும் முகாமில், 5 வயதுக்குள்பட்ட 46,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும்


பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெறும் முகாமில், 5 வயதுக்குள்பட்ட 46,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளி வளாகங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகள் உள்பட 387 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட 46,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
பொது சுகாதாரத்துறை பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் உள்பட 1,548 போ் பணியில் ஈடுபட உள்ளனா். பேருந்து நிலைய வளாகங்கள், கோயில்கள், மக்கள் அதிகளவில் கூடுமிடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து புகட்டப்படும்.
இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து புகட்டப்படும். எனவே, பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களுக்குச் சென்று சொட்டு மருந்தை கொடுக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...