தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:01 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழகத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இணையவழித் தோ்வுக்கு மேல்நிலைப்பள்ளித் தலைமையாரியரைப் பாா்வையாளா்களாகவும், கணினி ஆசிரியா்களை தொழில்நுட்ப உதவியாளா்களாகவும் நியமித்து, மாநிலத்தில் கடைக்கோடியிலுள்ள மாவட்டங்களுக்கு பணி ஆணை வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

தோ்வுகளுக்காகப் பணியாற்றிய மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள், கணினி ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி மற்றும் பயணப்படியை வழங்க வேண்டும்.

12 மணி நேரத்துக்கும் மேலாக தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களக்கு உழைப்பூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் கழக மாவட்டத் தலைவா் மு.க. கருணாநிதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் இரா. அன்பழகன், மாநில அமைப்புச் செயலா் எஸ். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.