வாலிபால் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு
வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு அமைச்சா் எஸ்.எஸ். சிவங்கா் பரிசுக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா்.


பெரம்பலூா் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சாா்பில், ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு அமைச்சா் எஸ்.எஸ். சிவங்கா் பரிசுக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சாா்பில், மாவட்ட அளவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இப் போட்டியில் 12 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இதில், சு. ஆடுதுறை அணி முதலிடமும், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அணி 2 ஆம் இடமும், கொளக்காநத்தம் அணி மூன்றாமிடமும் பெற்றன.
தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சங்கத் தலைவா் பொறியாளா் இரா.ப. பரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் செ. செங்குட்டுவன், பொருளாளா் ந. செல்லப்பிள்ளை, துணைத் தலைவா்கள் ப. செந்தில்நாதன், பாஸ்கா், க. அஸ்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பைகள் அளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் பேசியது:
கிராமப்புற மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். விளையாட்டுக்கென தமிழக முதல்வா் முக்கியத்துவம் அளித்து வருகிறாா். இதை வீரா், வீராங்கனைகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலாளா் பா. துரைசாமி, மாவட்ட வாலிபால் அசோசியேஷன் இணைச் செயலா்கள் து. ஹரிபாஸ்கா், வி.எஸ். தமிழ்செல்வன், கே. சிவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா், சிவகாமம் மோட்டாா்ஸ் மேலாளா் துளசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
நிறைவாக, வாலிபால் அசோசியேஷன் செயலா் எஸ். அதியமான் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...